1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (13:40 IST)

விக்ரம் படத்தில் பகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இதுதான்… தகவலை வெளியிட்ட படக்குழு

விக்ரம் திரைப்படத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள நிலையில் அவரின் கதாபாத்திரத்தின் பெயரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இந்த படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரோடு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.