திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (12:55 IST)

நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு கமல், அமைச்சர் உதயநிதி இரங்கல்

sathyaraj's mother
தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர் சத்யராஜ். இவரது தாயார்  நேற்று  வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் உதய நிதி ஆகியோர் இரங்கல் கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், நேற்று ( ஆகஸ்ட் 11) வயது மூப்பு காரணமாகக் காமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

தன் தாயார் மறைந்த செய்தியை அறிந்த நடிகர் சத்யராஜ் ஹைதாராபாத் படப்பிடிப்பில் இருந்து கோயம்புத்தூருக்கு விரைந்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல்  சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.  அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் சிபி சத்யராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’நடிகர் அண்ணன் திரு.சத்யராஜ் அவர்களின் தாயார் நாதாம்பாள் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடந்தேன். அம்மையாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தனது அன்புத் தாயாரை இழந்து வாடும் அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.