1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:27 IST)

அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார்.
இந்த நிலையில் தந்து அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் கமல்ஹாசனுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்  விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், `இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக்,  களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள்' என்று கூறியிருக்கிறார்.
 
பிக்பாஸ் பிரபலம் ஆரவ் கூறியுருப்பதாவது, டியர் கமல் ஹாஸன் சாருக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு நல்ல தலைவர் தேவை. அது நீங்களாக தான் இருக்க முடியும் என்று ட்வீட்செய்துள்ளார்.
 
தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி, இது குறித்து மாற்றம் நீ பார்க்க விரும்பும் மாற்றமாக இருப்பாய். நமக்காக மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் கமல் ஹாஸன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
 
உலக நாயகன் கமல் ஹாஸன் தனது கட்சியின் பெயரை இன்று மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.