ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (21:36 IST)

காலுக்கு இடையில் இருப்பது செக்ஸ் உறுப்பு அல்ல: கமல்ஹாசனின் வித்தியாசமான விளக்கம்

கால்களுக்கு இடையில் இருப்பது செக்ஸ் உறுப்பு அல்ல, உண்மையான செக்ஸ் உறுப்பு வேறு என உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி கொடுத்தாலும் சரி, டுவிட்டரில் பதிவு செய்தாலும் சரி சாதாரணமானவர்களுக்கு புரியாது என்ற ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் காதலர் தினம் குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘செக்‌ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன’ என்று கூறியுள்ளார்.
 
கமலஹாசனின் இந்த கருத்துக்கு பெரும்பாலான இளைஞர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே சமயத்தில் ஒரு சிலர் இந்த கருத்துக்கு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் கமலஹாசன் காதலர் தினத்தை சராசரி காதலர்கள் போல் சிந்திக்காமல் அடுத்த தலைமுறையினர்களுக்கு தேவையானதை சிந்தித்து கருத்து தெரிவித்துள்ளார் என்று பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்