புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:47 IST)

வைரமுத்துவின் ‘காதலர் தினம்’ கவிதை: இணையத்தில் வைரல்!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது காதலர்கள் இன்று தங்கள் காதலிகளுக்கு பரிசுகளை கொடுத்தும் வாழ்த்துக்களை பகிர்ந்தும் மகிழ்ந்து வருகின்றனர். இணையதளங்களிலும் காதலர் தின கொண்டாட்டங்கள் இன்று நள்ளிரவு 12 மணி முதலே தொடங்கிவிட்டது
 
காதலர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பகிர்ந்து வருவது குறித்த ஆயிரக்கணக்கான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் பெரும்பாலான திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை எழுதி காதலர்களை மகிழ்வித்த கவியரசு வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கவிதையை எழுதியுள்ளார். இந்த கவிதை தற்போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கவியரசு வைரமுத்து எழுதிய காதல் கவிதை இதுதான்:
 
காதலும் பசியும்
காணாது போயின்
பூதலம் மீது 
புதுப்பித்தல் ஏது?
 
வெற்றியில் தோல்வியாய்
தோல்வியில் வெற்றியாய்ப் 
பற்றிடும் காதலே 
பற்றுக பற்றுக!