புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:11 IST)

இளையராஜாவின் ‘இளமை இதோ இதோ’ குறித்து கமல் டுவிட்!

இசைஞானி இளையராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் இது குறித்த வீடியோ அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.