1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (17:55 IST)

கமல் அஜித் நடிப்பில் தேவர்மகன்-2...?

நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்தது பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமல்ஹாசன் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். பிக்பாஸ் ஒருபக்கம், சினிமா ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என்று எல்லா பணிகளையும் கவனித்து வரும் கமல் , தற்போது தனது அடுத்த அறிவிப்பாக  தேவர் மகன் 2-ம் பாகம் எடுக்க போவதாக கமல் தெரிவித்துள்ளார். 
இதற்கிடையில், தேவர் மகன்- 2 என்பது சாதி பெயரை குறிக்கிறது என்றும், மற்ற சாதியினருக்கு எதிராக இருக்கிறது என்றும், தேவர் சமூகத்திற்கு எதிரான படமாக இருக்கிறது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் கமல் ஹாசன் முழுக்க முழுக்க படத்திற்கு சாதி பெயரை வைக்கலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்
 
"இது அனைத்து சாதியினருக்கு எதிரான படம்".கண்டிப்பாக தேவர் மகன் 2 என்று டைட்டில் வைக்க மாட்டேன். ராஜ்கமலின் 6வது படம் என்று சொன்னால், யாருக்கும் புரியாது என்பதற்காக தேவர் மகன் 2 என்று கூறினோம். அவ்வளவு தான். மது ஒழிப்பு தொடர்பாக படம் எடுத்தால், அது யார் நடிக்க வேண்டும்? முழுக்க முழுக்க ஒரு குடிகாரன் தானே? அது போன்று தான் இப்படமும் என்று கூறியுள்ளார். 
 
இதற்கிடையில், கமல்ஹாசன், தல அஜித் கூட்டணியில், இப்படம் உருவானால், எப்படியிருக்கும் என்று விமர்சிக்க தொடங்கிய அஜித்தின் ரசிகர்கள் தேவர் மகன் -2 என்று ஒரு போஸ்ட்டரை தயார் செய்து அதில் அஜித்தின் கிரீடம் பட புகைப்படம் மற்றும் கமலின் புகைப்படத்தையும் வைத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.