வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (16:00 IST)

பிஎம் நரேந்திர மோடிக்கு ஆதரவு கொடுத்த காஜல் அகர்வால்! கலாய்த்த நெட்டிசன்ஸ்!

நடிகை காஜல் அகர்வால் ’பிஎம் நரேந்திர மோடி’ படத்தைக் காண ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
 

 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் வெளியாக உள்ளது. இந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து.
 
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்தால் அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தது.இந்த நேரத்தில் இப்படம் வெளிவந்தால் மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும் எனவே இப்படத்தை வெளியிடக்கூடாது என  தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகன் விவேக் ஓப்ராய், படம் குறித்து ட்வீட் ஒன்றை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். அதற்குப் பதில் அளித்த காஜல் அகர்வால், இந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் சிறப்பாக இருக்கப் போகிறது என்று ட்வீட் வெளியிட்டார். இதற்கு நெட்டிசன்ஸ் சிலர் கலவையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.