புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (11:03 IST)

காஜல் அகர்வால் ஆரம்பித்துள்ள புதிய பிஸ்னஸ்! கணவருடன் சேர்ந்து விளம்பரம்!

காஜல் அகர்வால் திருமனத்துக்கு பின்னர் கணவருடன் சேர்ந்து இண்டீரியர் டெக்கரேஷன் வியாபாரத்தை தொடங்கியுள்ளாராம்.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் என்ற தொழிலதிபருக்கும் இடையே திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த திருமணம் அவரது மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடைபெற்றது. இதையடுத்து காஜல அகர்வால் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று வந்தார். அதன் பின்னர் இப்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் காஜல் கணவருடன் சேர்ந்து வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளாராம். முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே இந்த தொழிலை நடத்தும் காஜல் அதற்காக கணவருடன் இணைந்து விளம்பர ப்ரோமோக்களிலும் நடித்துள்ளாராம்.