புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (11:29 IST)

20 வயதிலேயே திருமணம்… மனைவியின் கோரிக்கையால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார். 20 வயதே ஆகும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் 18 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். புதுமனத் தம்பதிகள் இருவீட்டாரோடும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் மனைவியோ தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளாராம்.

ஆனால் இந்த கோரிக்கைக்குக் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் இரு பக்கமும் இருந்த நச்சரிப்பால் ராஜ்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய ராஜ்குமார் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து தேட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவரது ஊருக்கு அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்துள்ளது. இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.