திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:35 IST)

ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த கைதி இசையமைப்பாளர்… ஆனால் வந்ததோ?

தமிழ் சினிமாவில் வளரும் இசையமைப்பாளராக இருக்கும் சாம் சி எஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த கதையை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஓர் இரவு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சி எஸ் விக்ரம் வேதா மற்றும் கைதி ஆகிய படங்களின் மூலம் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று பகிர்ந்த டிவீட் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது டிவீட்டில் ‘என் சகோதரரின் பிறந்தநாளுக்காக ஆப்பிள் வாட்சை பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்தேன். ஆனால் அவர்கள் பார்சலுக்குள் வெறும் கற்களை அனுப்பி வைத்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார். மேலும் பார்சலின் உள்ளே இருக்கும் கற்களைப் புகைப்படமும் எடுத்து பகிர்ந்துள்ளார்.

இது சம்மந்தமாக புகாரளித்த போதும் பிளிப்கார்ட் நிறுவனத்தினர் பணத்தைத் திரும்ப தரமுடியாது எனக் கூறிவிட்டனர்.