வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (19:45 IST)

ஹிந்திக்கு செல்கிறது கார்த்தியின் கைதி..

கைதி திரைப்படத்தில் கார்த்தி

கார்த்தி நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ள செய்தி உறுதியாகியுள்ளது.

கார்த்தி நடித்து கடந்த தீபாவளியன்று “பிகில்” திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்த திரைப்படம் கைதி. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இத்திரைப்படம் பிகில் திரைப்படத்தையும் மீறி வெற்றி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ட்ரீம்ஸ் வாரியர்ஸின் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகலாம் என பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது கைதி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. ட்ரீம்ஸ் வாரியர்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக எஸ்.ஆர்.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ என்பது பற்றி எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.