திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (15:25 IST)

‘காலா’ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

‘காலா’ சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. தியேட்டர்களைப் பொறுத்தவரை ஒருநாளைக்கு 4 காட்சிகள் திரையிடுவது வழக்கம். ஆனால், பெரிய நடிகரின் படங்கள் என்றாலோ அல்லது விழாக் காலங்கள் என்றாலோ கூடுதலாக ஒரு காட்சி ஓட்டிக் கொள்ளலாம்.
 
ஆனால், அதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அப்படி ‘காலா’ படத்தை ஒரு காட்சி எக்ஸ்ட்ராவாக ஓட்டிக்கொள்ள அனுமதி கேட்டு தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இன்று முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு எக்ஸ்ட்ரா காட்சி ஓட்டிக்கொள்ள  அனுமதி அளித்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.  தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸானதாகச் சொல்கிறார்கள்.