“நான் இரண்டுமுறை ‘காலா’ படம் பார்த்தேன்” - ரஜினிகாந்த்

Last Updated: செவ்வாய், 5 ஜூன் 2018 (20:49 IST)
‘நான் இரண்டுமுறை ‘காலா’ படம் பார்த்தேன்’ எனத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. நானா படேகர், சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்,  மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 
இந்தப் படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், “எனக்கு ‘காலா’ படம் ரொம்பப் பிடித்திருக்கிறது. இரண்டு முறை இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். பா.இரஞ்சித், அவருடைய ஸ்டைலில் சமூகக் கருத்துகளை கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறார். நான்கைந்து சுவாரசியமான கேரக்டர்களை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த குழுவும் நண்பர்களாகப் பழகி, ஒவ்வொருவரும் தங்களுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுத்தனர்”  என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :