வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (16:22 IST)

லலிதா ஜூவல்லரி உரிமையாளரை நடிக்க வைக்க விரும்பிய கே வி ஆனந்த்!

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் தன்னுடைய கடைசி படத்தில் லலிதா ஜூவல்லரி உரிமையாளரை நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் கடந்த மே மாதம்  மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவர் கடைசியாக எழுதி தயாராக வைத்திருந்த கதையை இயக்க இப்போது அவரின் குடும்பமும், அதை தயாரிக்க இருந்த ஏஜிஎஸ் நிறுவனமும் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த கடைசி கதைக்காக கே வி ஆனந்த் தனது குழுவுடன் விவாதித்த நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகனாக சிம்புவும், நாயகியாக ஐஸ்வர்யா ராயும் வில்லனாக விளம்பரங்களில் தலைகாட்டும் லலிதா ஜூவல்லரி உரிமையாளரும் நடிக்க வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாராம்.