வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (19:57 IST)

கதாநாயகியாக அறிமுகமாகும் ஜூலி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

 
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார்.
 
இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். 
 
ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் நடிக்க உள்ளார். இந்த படத்தை கே 7 புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து ஜூலி கூறியதாவது:-
 
இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.