1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (14:31 IST)

ஜூனியர் என்டிஆர் கையில் எலும்பு முறிவு

நடிகர் ஜூனியர் என்டிஆர் கையில் எதிர்பாராதவிதமாக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம். 
 
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர்., திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்துள்ளனர். இதனிடையே நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம். இதனை அடுத்து அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.