சூர்யா படத்தில் நடக்கபோகும் ஜோதிகா - குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் ஜோதிகா. இந்த படத்தையும் சூர்யாவே தயாரிக்கிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. "பொன்மகள் வந்தாள்’" என பெயரிடப்பட்ட இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்வதோடு சமூக அக்கறையுள்ள நோக்கத்துடன் நடிக்கும் ஜோதிகா இந்த படத்திலும் எதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தை கையிலெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.