வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (17:55 IST)

நான் பாலிவுட் ஹீரோ… பிராந்திய மொழிப் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் – ஜான் ஆப்ரஹாம் கருத்து!

நடிகர் ஜான் ஆப்ரஹாம் சலார் படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜான் ஆப்ரஹாம் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ள அவர் மாநில மொழிப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இதுபற்றி ‘நான் எந்த ரீஜினல் படத்திலும் நடிக்கவில்லை. அப்படி பரவும் வதந்தி எப்படி தொடங்கியது என்று தெரியவில்லை. நான் எந்த வொரு மாநில படத்திலும் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். மற்றவர்களை போல வியாபாரத்துக்காக அதை செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நான் இந்தி நடிகர்’ எனக் கூறியுள்ளார்.