1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (16:51 IST)

துல்கர் சல்மானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !

துல்கர் சல்மானுக்கு விதித்த தடையை வாபஸ் பெறுவதாக கேரள தியேட்டர் உரிமையா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
 
நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் என்ற திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார். இதோ இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த கவனத்தை அடுத்துஇப்படம் இம்மாதம் ரிலீஸாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

பிரபல இப்படத்தை  ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக துல்கர் சல்மான் தனது சமூகவலைதளத்தில் அறிவித்தார். இது கேரள  தியேட்டர்களுக்கு அதிர்ச்சியூட்டியது.

இந்நிலையில் துல்கர் சல்மானை கண்டிக்கும் வகையில் வரது படங்காய் இனி கேரள தியேட்டர்க்ளின் வெளியிடமாட்டோம் என அறிவிடத்தனர்.

இப்படம் பிப்ரவரி 14 தேதிக்கு முன் தியேட்டரில்  வெளியிடுவதாக ஓடிடியுடனாக   ஒப்பந்தத்தில்  குறிப்பிட்டு இருந்ததாகவும் ஆனால் கொரொனாவால்  திட்டமிட்டஓடி வெளியிட முடியவில்லை எனவும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் ஓடிடியில் வெளியிடவில்லை என்றால் அது ஒப்பந்தத்தை மீறியதாகும் என்பதால் ஓடிடியில் வெளியிடுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விளக்கத்தை கேரள தியேட்டர் உரிமையாளார்கள் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டு சல்மானுக்கு விதித்த தடையை விலகிக்கொண்டனர்.