ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:39 IST)

ஒரு நடிகரிடம் திரைப்படத்தின் வசூல் பற்றி கேட்காதீர்கள்- ஜீவா பேட்டி!

நடிகர் ஜீவா  நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.

சூப்பர்குட் நிறுவனத்தின் 90ஆவது தயாரிப்பாக உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள் நிதி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும்  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இப்போது நடிகர் ஜீவா இறங்கியுள்ளார். இது சம்மந்தமாக அளித்த பேட்டியில் அவர் தன்னுடைய கடந்த கால படங்களின் வெற்றி, தோல்வி மற்றும் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டது ஆகியவற்றை பேசியுள்ளார். மேலும் ஒரு நடிகரிடம் படத்தின் வசூல் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் பிஸியான நடிகராக இருந்த ஜீவா தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்ததால் இப்போது பட வாய்ப்புகள் குறைந்து தன் தந்தையின் சொந்த நிறுவனத் தயாரிப்பில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.