தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனருக்கு வாய்ப்பளித்த ஜெயம் ரவி!
ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் லஷ்மனிடம் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரியலாம் என ஜெயம் ரவி கூறியுள்ளாராம்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ரோமியோ ஜூலியட், போகன் மற்றும் பூமி படங்கள் உருவாகியுள்ள நிலையில் லக்ஷ்மணின் வேலை செய்யும் திறமையைப் பார்த்து வியந்த ஜெயம் ரவி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளாராம். இதற்காக தனது நண்பர்கள் குழுவோடு அமர்ந்து கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் லக்ஷமன்.