ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (20:42 IST)

மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்கும் அவரது மகன்! என்ற படத்தில் தெரியுமா?

ஜெயம் ரவியும் அவரது மகன் ஆரவ்வும் கடந்த ஆண்டு வெளியான ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் அப்பா மகனாகவே நடித்து இருந்தனர். இந்த படத்தில் நடித்த ஆரவ்வுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி ஒரு சில விருதுகளும் கிடைத்தது. இதன் பின்னர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து இருந்தபோதிலும் அவரது படிப்பில் கவனத்தை கொண்டு வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் மகனுக்கு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  ஏற்கனவே ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் கேரக்டரில்  நடிக்க உள்ள நிலையில் அவரது மகனும் தற்போது ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
பிரபல எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும், ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும், பூங்குழலி கேரக்டரில் நயன்தாராயும், சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சனும், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமும், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர். மேலும் பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது