விரைவில் அவன் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்… நண்பன் விஷால் குறித்து ஜெயம் ரவி!
சில தினங்களுக்கு முன்னர் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.
இதையடுத்து அவரின் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவின. ஆனால் விஷால் தரப்போ அவருக்கு வைரஸ் காய்ச்சல்தான் மற்றபடி ஒன்றுமில்லை என்று பதிலளித்துள்ளது. இப்போது விஷால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொண்டு உடல்நலத்தைத் தேற்றிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜெயம் ரவி, “விஷாலைப் போல ஒரு தைரியசாலியை நான் பார்த்ததில்லை. அவன் இப்போது ஒரு மோசமானக் காலகட்டத்தில் உள்ளான். அவன் தைரியமே அவனைக் காப்பாற்றும். அவன் நல்ல மனசுக்கு அவன் சீக்கிரமே சிங்கம் மாதிரி மீண்டு வருவான்” என நம்பிக்கையாக பேசியுள்ளார்.