1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 ஜனவரி 2025 (09:19 IST)

மத கஜ ராஜா படத்தின் ரிலீஸைப் பார்க்க முடியாமல் போன ஐந்து நடிகர்கள்!

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது.

விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய நிலையில் பல சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸாகின்றன. அந்த வரிசையில் இப்போது விஷாலின் ‘மத கஜ ராஜா’ திரைப்படமும் இணைந்துள்ளது. எதிர்பாரத்ததற்கு மாறாக இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பும் நிலவுவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த மணிவண்ணன், மனோ பாலா, சிட்டிபாபு, சீனு மோகன் மற்றும் மயில்சாமி ஆகிய ஐந்து நடிகர்கள் தற்போது நம்முடன் இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று.