விஜய் & மோகன் ராஜா படம் எப்போது ?– ஜெயம் ரவி பதில் !
விஜய்யும் மோகன் ராஜாவும் இணையும் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளித்துள்ளார்.
அடங்கமறு வெற்றிக்குப் பின் ஜெயம் ரவியின் அடுத்தப்படமாக உருவாகியுள்ளது கோமாளி. ஆகஸ்ட் 15 அன்று வெளிவரவுள்ள இப்படத்தை திருச்சி, மதுரை விநியோக பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கான புரோமோஷன் பணிகளில் இப்போது ஜெயம் ரவி பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யும் அவரது அண்ணனுமான மோகன் ராஜா இணையும் படமும் எப்போது ஆரம்பிக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ‘இருவரும் நல்ல நண்பர்கள். அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்கள். நல்லக் கதையாக அமைந்தால் பண்ணுவோம் எனப் பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்தப்படம் தனி ஒருவன் 2-க்குப் பின்னர் தொடங்கும் ‘ எனக் கூறியுள்ளார். விஜய்யும் மோகன் ராஜாவும் இணைந்து ஏற்கனவே வேலாயுதம் படத்தில் பணிபுரிந்துள்ளனர்.