சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெயம் ரவி… அகிலன் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் ஜெயம் திரைப்படம் ரிலீஸாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக பூமி திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அகமது இயக்கும் படம், இயக்குனர் எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அகிலன் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.