தனுஷின் வாத்தி படத்தோடு மோதும் ஜெயம் ரவியின் படம்!
ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிட பட்டிருந்தது.
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் இப்போது பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில் தனுஷின் வாத்தி திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.