திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:32 IST)

அவதார் நான்காம் பாகத்துக்கு முன்பாக வேறு ஒரு படத்தை இயக்கும் ஜேம்ஸ் கேமரூன்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்தால்தான், அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். அதையடுத்து எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிட்டதால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவதார் மூன்றாம் பாகம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் நான்காம் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக ஹிரோஷிமா அணு குண்டு தாக்குதல் பற்றி ஒரு படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி அவர் “நாம் மிகவும் மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்போது ஹிரோஷிமா சம்மந்தமாக படம் எடுத்தால் அது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.