1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (14:35 IST)

அவதார் 2வில் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்யும் ஜேம்ஸ் கேமரூன்

அவதார் திரைப்படத்தின் இரண்டு, மூன்று பாகங்களை எடுக்கயிருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் தெ‌ரிவித்திருந்தார். உலகின்  இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்தது அவதார் தான். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார்.

 
ஜேம்ஸ் கேமரூனின் படங்களுக்கும் மற்ற சில கமர்ஷியல் இயக்குனர்களின் படங்களுக்கும் உள்ள வித்தியாசம், அதன் திரைக்கதை மற்றும் உணர்வு‌‌ ரீதியான நெருக்கத்தை காணலாம்.
 
தற்போது இவர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாகவுள்ளார், முதல் பாகம் ரூ.15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் பல புதுமைகளை புகுத்த ஜேம்ஸ் கேமரூன் இரவு-பகல் பாராமல் உழைத்து  வருகின்றாராம்.
 
இதில் ஒரு சிறப்பம்சமாக 3டி கண்ணாடி அணியாமலேயே படத்தை 3டியில் பார்க்கும் ஒரு சிறப்பு டெக்னாலஜியை இந்த  படத்தில் இவர் அறிமுகப்படுத்தவுள்ளாராம். இப்படத்திற்கு மேலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.