ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இணையத்தில் வைரல்!
நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.