புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 13 அக்டோபர் 2018 (10:43 IST)

அது சஞ்சயின் அக்கவுண்டே இல்லை... விஜய் தரப்பு அறிவிப்பு

விஜயின் குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா இருவக்குமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அக்கவுண்டே இல்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

ரசிகர்களின் கேள்விகளுக்கு  சில நாட்களாக விஜய்யின் மகன் சஞ்சய் இன்ஸ்டாகிராமில் பதிலளித்து வருவதாக சிலப் பதிவுகள் புகைப்படங்களாக  சமூக வலைதளங்களில் பரவலாக  பரவின.  குறிப்பாக தல கெத்து", ``தலயின் பிரியாணியை ஒரு தடவைதான் சாப்பிட்டிருக்கேன்"  ``விஜய் சேதுபதி, அஜித் தான் எனக்குப் பிடித்த நடிகர்கள்", என விஜய் மகன் சஞ்சய் பதிலளித்துள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில்  கேள்வி பதில் வெளியான இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விஜய்யின் மகன் சஞ்சையுடையது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், ``விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம்" என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.