செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (09:04 IST)

சமந்தாவுடன் விவாகரத்தா? மவுனம் களைத்த நாக சைதன்யா

எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். 

 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் நாக சைதன்யா - சமந்தா தம்பதியினர் இருந்து வந்ததனர். இதனிடையே நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது.  படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச கூடாது என்பதை கடைபிடித்து வருகிறேன்.
 
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இந்த புரிதல் எனக்குள் வந்துவிட்டது. இதனால் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன் என்று தெரிவித்து விவாகரத்து வெறும் வதந்தி என அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.