1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:27 IST)

சமந்தா - நாகசைத்னயாவின் விவாகரத்து உறுதி - போட்டுடைத்த பிரபலம்!

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது
 
அதை குறித்து தினம் ஒரு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் சம்மந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்து உறுதி என நடிகர் கமல் ஆர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
அவரின் அந்த பதிவில், சமந்தாவும் அவரது கணவரும் விரைவில் விவாகரத்து கோரப் போகிறார்கள், விவகாரத்துக்கான காரணமாக வெப் சீரிஸ் ஃபேமிலிமேன் 2 இல் அவரது பாத்திரம் தான் என கூறப்படுகிறது. இதுபோன்ற மோசமான தொடருக்காக மனோஜ் பாஜ்பாய் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.