புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (13:45 IST)

ஒழுங்கா ஒர்க் அவுட் பண்ண விட்றானா பாரு.... ஐஸ்வர்யா மேனன் வீடியோ!

கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளத்தில் 24 மணி நேரமும் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில், தன் செல்ல நாயுடன் சேர்ந்து ஒர்க் செய்து அசத்தும் வீடியோவை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.