செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (12:49 IST)

சேங்கை அரசி மவனுக்கு... சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாண்டிராஜ்!

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் வருமானம் இழந்து பதிப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்,
சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில் இன்று தனது இன்று தனது 43வது பிறந்தநாள் கொண்டாடும் சூரிக்கு இயக்குனர் பாண்டிராஜ் "சேங்கை அரசி மவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் " என கூறி நம்ம வீட்டு பிள்ளை படத்தின் செட்டில் அவருடன் டிராக்டரில் ஜாலியாக பயணிந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.