சினிமா நடிகர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது அவலமில்லையா?-தங்கர் பச்சான்
சினிமா நடிகர்களுக்காக சண்டையிட்டு அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது அவலமில்லையா? என்று இயக்குனர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான். இவர், அழகி, பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது, தன் மகள் விஜித் பச்சனை நடிப்பில், தக்கு முக்கி திக்கு தாளம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சான் தன் டுவிட்டர் பக்கத்தில், உயிரைப்பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களின் வீரம் தான் போற்றுதற்குரிய உண்மையான வீரம். அவர்கள் தான் தமிழ்நாட்டின் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா நடிகர்களை உண்மையான வீரனாக எண்ணி இளைஞர் சமுதாயத்தினர் சண்டையிட்டு அவர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது அவலமில்லையா! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.