திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (14:33 IST)

ஒன்னு நீ இருக்கனும்..இல்ல நான் இருக்கனும் - எகிறிய ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் நடிகை யாஷிகாவுடன் நடிகை ஐஸ்வர்யா தத்தா சண்டை போடும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு சர்வாதிகாரமாக செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் வீட்டில் இருப்பவர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார். அவரை எதிர்த்து பேசிய செண்ட்ராயன் உட்பட பலர் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஐஸ்வர்யா மீது கடுமையான கோபம் அடைந்தனர். அவரை திட்டி சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
 
குறிப்பாக, தாடி பாலாஜியின் மீது அவர் குப்பையை கொட்டியது தவறு என பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், அவரின் சர்வாதிகார போக்கு நேற்றையை நிகழ்ச்சியில் முடிவுக்கு வந்தது. 
 
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புரமோ வீடியோவில் யாஷிகாவுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா, இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறேன். இங்கு நான் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர் இருக்க வேண்டும்” என கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.