ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (20:43 IST)

விஜய் 68 பட தலைப்பு இதுவா? வெளியான தகவல்...ரசிகர்கள் மகிழ்ச்சி

vijay
விஜய் 68 பட தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்  லியோ படத்திற்குப் பின்னர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார்.

’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்த தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கியுள்ளார்.

இப்படம் பல நடிகர், நடிகர்கள், நடித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், விஜய் 68 பட தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, G.O.A.T – greatest of all time’’’என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.