வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (14:01 IST)

அடிச்சது ஜாக்பாட்… விஜய் 68 படத்தில் ஹீரோயின் இவரா?

விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விவரமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இப்போது ஊட்டியில் திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய குழுவினரோடு ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியா பவானி சங்கரை தேர்வு செய்துள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. அது போலவே வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.