திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (07:47 IST)

பிக்பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்யபோகிறாரா மேக்னா ராஜ்?

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இவர் கன்னட நடிகரும் அர்ஜுனின் அக்கா மகனுமான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.  இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 
சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்போது அவர் குழந்தையாகவே மனைவிக்கு மகனாக பிறந்துள்ளார். 

சிரஞ்சீவி இறந்தாலும் அவர் மீது உள்ள அளவுகடந்த காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி மேக்ராஜின் உண்மையான இதயத்திற்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ஆனால், தற்போது அவரது ரசிகர்களே அதிர்ச்சி அடையும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
அதாவது, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரும் சிரஞ்சீவி சார்ஜாவின் நெருங்கிய நண்பருமான ப்ரீத்தம் என்பவரை மேக்னாராஜ்  மறுமணம் செய்யப்போவதாக யூடியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது வெறும் பொய்யான தகவல் என கூறியுள்ள ப்ரீத்தம் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.