சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:03 IST)

தலைவர் 171 படத்தில் நான் நடிக்கிறேனா? நடிகர் மம்மூட்டி அளித்த பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து லோகேஷ் படத்துக்கு தயாராகி விடுவார் என்று சொல்லப்படுகிறது.

தலைவர் 171 படத்தில் பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் தளபதி படத்துக்குப் பிறகு மம்மூட்டி, ரஜினியோடு இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மம்மூட்டி ”அந்த படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. ஒருவேளை அந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருந்து என்னை அணுகினால் நான் கண்டிப்பாக நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.