'பிக்பாஸ்' காயத்ரி ரகுராம் கர்ப்பமா? அதிர்ச்சி புகைப்படம்
காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் அவரது பெயரை கேள்விப்பட்டவுடன் பிக்பாஸ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஓவியாவை அவர் செய்த டார்ச்சரை இன்னும் யாரும் மறக்கவில்லை
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் காயத்ரி ரகுராம் ஒரு காரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவர் கர்ப்பிணியாக இருப்பது போன்றும் உள்ளது.
இதனையடுத்து காயத்ரி ரகுராமை ஒருசிலர் வாழ்த்தியும் ஒருசிலர் கலாய்த்தும் வருகின்றனர். மேலும் ஒருசிலர் காயத்ரி ஒரு சீரியலில் நடித்து கொண்டிருப்பதாகவும் அந்த சீரியலில் காயத்ரி நடிக்கும் கர்ப்பிணி கேரக்டரின் புகைப்படம் தான் இது என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்க காயத்ரியே இதுகுறித்து விளக்கமளிப்பது நல்லது என்று டுவிட்டர் பயனாளிகள் கூறி வருகின்றனர்