வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (22:08 IST)

"ஓ மை கடவுளே" படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் !

அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்திருந்த " மை கடவுளே" படம் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்தார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் - ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் கதை யதார்த்தமாக இருந்ததால் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்த இப்படம் பிரண்ட்ஷிப், காதல் கல்யாணம் , காமெடி என அத்தனை அம்சங்களும் கலந்திருந்ததால் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் தற்ப்போது டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், "ஓ மை கடவுளே சூப்பர்... இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி நேர்த்தியாக உள்ளது. இயக்குநர் அஷ்வத் அருமையா பண்ணியிருக்கீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர்" என படத்தை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார்.

இதனை கண்டு கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் அசோக் செல்வன் "இது தான் என்னுடைய உண்மையான ஓ மை கடவுளே தருணம. நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உண்மையை சொல்லனும்னா இந்த பாராட்டை எண்ணி நான் தற்ப்போது உற்சாகத்தில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நன்றி சார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன்.

பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ஓ மை கடவுளே படம் அதிக கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஓ மை கடவுளே திரைப்படம் டொரோண்டோ சவதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திரையிடப்படும் என்று படக்குழுவினர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.