1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (22:35 IST)

’’இந்தியாவின் கௌரவம்… நீ தமிழ்நாட்டின் பொக்கிஷம்…’’ கமல்ஹாசனை கவிதையால் வாழ்த்திய நடிகர்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பலரும் அவருகு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், கமல்ஹாசனை வாழ்த்தி ஒரு கவிதை எழுதியுள்ளார்.
 

அதில், குடி உடல் நலத்திற்குக் கேடு உண்மைதான் ஆனால் இந்தக் குடியால் பெருமைப்படுகிறது நாடு எந்தக் குடி..பரமக்குடி என்று இந்தக் கவிதையின் இறுதியில் தோல்வியையும் தழுவுவாய்…வெற்றியையும் அள்ளுவாய்… ஏற்றுகிறது உன்னை இன்று நடிப்புலகம்…எங்களுக்கு நீ தான் இரண்டாம் நடிகர் திலகம்…. அன்புள்ள மூன்றாம் பிறையே…பத்மஸ்ரீயே .நீ காண வேண்டும் கலை உலகில் ஆயிரம் பிறையே!!! என விவேக் எழுதியுள்ள கவிதை  ஒரு மேடையில் படித்ததை ஒரு ரசிகர்கள் இன்று டுவீட் செய்து விவேக்கிற்கு டேக் செய்யவே, அதைப் பார்த்து இதை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கவிதை வைரலாகி வருகிறது.