1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (18:38 IST)

75 வது படத்தில்....நயன்தாராவின் சம்பளம் இததனை கோடியா?

நயன்தாரா தமிழ் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது 75 வது படத்திற்கு அவர் பெற்றுள்ள சம்பவம் பற்றிய தகவல் வெளியாகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை, நயன் தாரா. இவரது 75வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதால் இந்த படம் நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ராஜா ராணி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை  முதலில் மதன் தயாரிப்பதாக இருந்த நிலையில்,  நயன் தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் என்பதால் டிரைடன் ரவி இப்படத்தின் கதையைக் கேட்டு, ஜீ ஸ்டுடியோவுக்கு தகவல் சொல்லி, அவர்களே  ஃபர்ஸ்ட் காப்பிக்காக ரூ.20 கோடி கொடுத்து   இப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அன்னப்பூரணி எனப் பெயர் வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.