1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : சனி, 20 மே 2017 (12:29 IST)

18ஆம் நூற்றாண்டுக் கதையில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் படத்தின் கதை, 18ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர், அவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத்.  ‘பாகுபலி’யைப் பார்த்து வியந்துபோன லாரன்ஸ், தனக்கும் அதுமாதிரி ஒரு சரித்திரக்கதை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அவருக்காக, 18ஆம் நூற்றாண்டில் ஒரு பாதியும், 19ஆம் நூற்றாண்டில் ஒரு பாதியும் நடப்பது போல் ஒரு கதையை  எழுதியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
 
இந்தப் படத்தை, ராஜமெளலியின் அசோஸியேட்டான மஹாதேவ் இயக்கப் போகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம்  தயாரிக்கப்பட இருக்கிறது. படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் ஹீரோயினாக நடிக்க, காஜல்  அகர்வாலிடம் கேட்க இருக்கின்றனர். காஜல், தற்போது விஜய்க்கு ஜோடியாக ஐரோப்பாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.