திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 1 ஆகஸ்ட் 2018 (11:15 IST)

தனது இன்ஸ்டாகிராமில் புலிக்கு பால் கொடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகர் சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதீஷ் புலிக்கு முத்தம் கொடுத்து, பால் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்படம் முதல் பாகத்தில் அறிமுகமான நடிகர் சதீஷ் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த  தமிழ்ப்படம் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நடிகர் சதீஷ். அவ்வப்போது சமூக பிரச்சனைகள் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று புலிகள் தினத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சதீஷ் அதில் புலிக்கு பாலூட்டுகிறார். மேலும் அந்த புலியின் தலையில் தடவிக்கொடுத்து முத்தமும் கொடுக்கிறார். இந்த வீடியோவை புலிகள் தினத்திற்காக தான் பகிர்ந்திருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.