புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (12:07 IST)

இளையதளபதி, தளபதி அடுத்தது தலைவனா? நெல்சன் கேள்விக்கு விஜய் பதில்!

vijay nelson
இளைய தளபதிம் தளபதியை அடுத்து தலைவன் ஆவது எப்போது என்ற இயக்குனர் நெல்சன் கேள்விக்கு விஜய் பதிலளித்துள்ளார் 
 
தளபதி விஜய்சன் டிவிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது என்பதும் இன்று மதியம் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்று இளைய தளபதி, தளபதி ஆகிவிட்டீர்கள். தளபதி எப்போது தலைவன் ஆவார் என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த விஜய் இளைய தளபதியாக இருந்த என்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள்தான் என்றும் அதே போல் நான் தலைவனாக வேண்டுமா என்பதை ரசிகர்களும் காலமும் சூழ்நிலையும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார் 
 
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விரும்பியதால் அதற்கு அனுமதி அளித்ததாகவும் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விஜய் அந்த பேட்டியில் தெரிவித்தார்