செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2017 (16:42 IST)

மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்; விஜய் ரசிகர்களுக்கு ட்வீட் செய்த ஆர்த்தி

பிக்பாஸ் ஆர்த்தி, தலபதி விஜய்யை பல்வேறு டுவிட்டுகளில் விமர்சித்துள்ளார். நடிகர் அஜித்தின் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனிரில் உதாரணமாக குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி டுவிட் செய்திருந்தார்.

 
நடிகை ஆர்த்தி தளபதி விஜய்யை தாக்கிப் பேசியதால் அவரின் ரசிகர்கள் கோபமாக உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி மருத்துவமனை ஒன்றில் நடந்த அலட்சியத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மெர்சல் படத்தில் வந்தது போல் என்று கூறி அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
 
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன விஜய்க்கு ஐஸ் வைத்து பட வாய்ப்பு தேடப் பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். மேலும் ஒருவர் இது பழைய நியூஸ் என்று ஒருவர் கமெண்ட் போட்டார். அதற்கு ஆர்த்தி பழசோ, புது நியூஸோ ஆனால் இது உண்மை...என் அம்மாவுக்கு டயாலிசிஸ் செய்ததால் அதன் வலி அறிவேன்..கடவுளை அடுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை நம்புகிறோம். கடவுள் காக்கட்டும் என்று ட்வீட் செய்துள்ளார் ஆர்த்தி.
 
இதனை தொடர்ந்து விஜய் ரசிகர், பார்த்து ட்வீட் போடுங்க ரெய்டு வந்துற போறாங்க என்று ட்வீட் செய்துள்ளார். பதிலளித்த ஆர்த்தி மடில கனம் இல்லை வழியில பயம் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.